Friday, 12 January 2018

முட்டையே உலகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.
Art : Mohumed Batcha

முட்டையே உலகமென்று 
இரத்த திசுக்கள் 
சொல்லிக் கொண்டன 

அண்டப் பிண்டங்களின் 
களிப்பு நடனத்தில், 
ஒற்றைக் கருவாகி 
ஓருயிராய் வளரும் போது, 

மற்றொரு உலகம் 
இருக்குமென ஞானம் கூடி 
ஓடுடைத்து 
வெளிச்சம் கண்டது 

அதிசயத்தின் பக்கங்களில் 
ஆர்ப்பரித்தது உலகம். 

தாய்மையென்ற அன்பு 
சிறகு பொத்தி வளர்த்தது, 

எதிரிகளும் இருப்பதுதான் 
உலகமென்று 
இப்போது தெரிந்தது. 

பறக்கும் வரையிலும்கூட 
பயத்தை 
கட்டிப் பிடித்தே வாழ்ந்தது 

சிறகுகளை விரித்த பிறகுதான் 
அழகியல்களின் 
அதிசயத்தில் சேர்ந்தது. 

அடுத்தொரு உலகம் 
விரியுமா என்று 
இன்னமும் 
வானத்தில் நீந்துகிறது. 

- மு.முகமதுபாட்சா*
மீள் 12/01/2017

No comments:

Post a Comment

Popular Posts