
புத்தகம் 4
விரிந்து பரந்தக் கடலில்தான்
ஒரு துளி நீராய் நான்,
பூக்களே கடலாய் விரிகின்றது,
தேனீகளோடு நானும் சிறகசைக்கிறேன்,
போதி மரத்துப் புத்தர்கள்,
கடலுக்குள் ஞானத்தை விரித்து வைக்கிறார்கள்.
ஆன்மிக வாசல்களிலும்
கட்டுக்கடங்காத கூட்டங்கள்,
காந்தியும், பெரியாரும்
வெவ்வேறு தளங்களில் உரையாடிக் கொண்டிருக்க,
சமையல் பிரியர்களும், சாப்பாட்டுப் பிரியர்களும்
மீன்களைப் பிடித்து
சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
கடலுக்குள்ளும் ஆயிரமாயிரம் கதைகளிருப்பதாக
கதைகளைச் சொல்லியபடி
வண்ண வண்ணப் பறவைகள் பறக்கின்றன,
கவிஞர்களெல்லாம்
கவிதைகளைப் பரத்தி, நிலங்களைச் சமைத்த இடத்தில்
கார்ட்டூன் நாயகர்கள்
குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்க,
கேலக்ஸிகளை இழுத்து வந்து கடலின் மேல்
மிதக்க வைக்கிறது அறிவியல் விரித்த வானம்.
கடலைச் சின்னதாய் சுருக்கியெடுத்து
கைப்பைகளில் எடுத்துக் கொண்டு நடக்கிறேன்,
கடல் வற்றாமல் மேலும் மேலும் விரிகிறது,
நீங்களும் போனால்
அந்த அதிசயக் கடலை ஆராதிக்கலாம்,
வலைதனை வீசி கடலினைப் பிடித்து
உங்களின் பைகளிலும் நிரப்பிக் கொள்ளலாம்...
பின் குறிப்பு :
அந்தக் கடலின் பெயர் , சென்னை புத்தகக் கண்காட்சி
- மு.முகமது பாட்சா*
10/01/2018 (15)
No comments:
Post a Comment