Thursday, 4 January 2018

கஃபன் துணி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

சூஃபி கிழவன் அழுகிறார் 
உலகம் கஃபன் துணியால் மூடப் பட்டிருக்கிறது 
நாமும் அதற்குள்தான் மூடப் பட்டிருக்கிறோம் 
அறியாமை 
நம் சிறகுகளை ஒடித்து வைத்திருக்கிறது, 
மரணிப்பின் பின் 
கஃபன் துணி சற்றே விலக்கப் படும் 
பார்வையாளர்களின் பார்வைக்காக மட்டுமல்ல 
ஒடிந்த சிறகுகளை மற்றவர்கள் பார்ப்பதற்கும்தான். 
கஃபன் துணி மூடப்படும் நம்மால் பறக்க முடியாது 
இனிய சகாக்களே 
கஃபனிடும் முன் பறவையாக நேசத்தைத் தேடுங்கள் 
இறைவன் 
அன்பை இரையாக அள்ளி வைத்திருக்கிறான்... 
சிறகுகளைப் பறப்பதற்காகப் பக்குவப் படுத்துங்கள் 
உங்களைக் கஃபனிடுவதற்கு முன்பாக.

பரீத் உத் தீன்

(கஃபன் துணி - சவத்துணி)

தமிழ் : முகமது பாட்சா*




No comments:

Post a Comment

Popular Posts