
புத்தகம் 3
இருட்டிற்குள் கிடந்த அந்தப் புத்தகம்
சுவாசத்திற்காகத் தன்னை
ஒவ்வொரு தாளாகக் கிழித்துக் கொண்டது,
தராசுக்காரனின்
தட்டிலமர்ந்த போது தனித் தனியாகக் கழன்றது,
வாங்கி வாசித்த அச்சனின் கண்கள்
அத்துணைப் பரிச்சயம்,
பூவாக நகர்த்தும் அந்த விரல்களை
அவ்வப்போது முத்தமிட்டுக் கொள்ளும்,
வாசிக்கும் கண்களில்
வசிப்பதும் கூடத் தனிச் சுகம்,
உடைந்த கிடந்த அச்சனின் கண்ணாடியும்
புத்தகமும் இனி ஒன்றுதான்,
எழுத்துகளை
இணையத்தில் தேடிக் கொண்டிருந்தவர்கள்
எடைக்குப் போடும் போது வருத்தப்படவில்லை...
முறத்திற்காவது
பூசி மெழுகச் சேருமா இந்தப் புத்தகம்.
- மு.முகமது பாட்சா*
09 /01 /2018 (13)
No comments:
Post a Comment