
கொட்டடிக்குள்
அடங்காத இசையை
தூண்டில் போடாமல்
அழைத்துப் போகிறான்
பரிசல்காரன்!
இசையென்ற சீதையிடம்
சிக்கிக் கொண்டதோ?
மாரீச மான்!
ஸ்வரக் கூட்டலில்
சொக்கி விழுகிறது
உயிர்ப்பின் வரிகள்!
நரம்புகளின் அதிர்வில்
நர்த்தனம் ஆடுகிறது இசை!
பரிசல்காரன்
மாயக்காரனாக இருப்பானோ?
மயங்கி ஆடுகிறது
மனித இருதயங்கள்!
அவன் விரல்களை
முத்தமிடுவதற்கு
பிடிக்கிறது
பியானோ கட்டைகளுக்கு...
இசைக் கருவிகளின்
காதலனா இவன்?
.
பரிசல்காரனே! - நீ
மாயக்காரனா? - இல்லை
மாரீசமானா?
சொக்கிப் போனவர்கள்
சொல்லாமல் போனால் எப்படி?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment