Friday, 12 January 2018

நகரத்து பொங்கல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

நகரத்தின் வாசல்களில் 
ஸ்டிக்கர் கோலம்

அம்மா 
முதியோர் இல்லத்தில்
பழையனக் கழிதலாய் 

இணையத்தில் தேடி 
மண் பானை  கிடைக்க வில்லை 
எவர் சில்வர் சட்டியில் 
சீனிப் பொங்கல்

முற்றம் இல்லாத வீட்டில் 
எலக்ட்ரிக் ஸ்டவ் தான் 
-எரியும் அடுப்பு

சூரியனை 
சுவற்றில் மாட்டி 
இரண்டு நாள் ஆகிறது

"வாடியம்மா பொங்கலைக் குலவிட" 

மகள் சொல்கிறாள்  "போம்மா.. 
தல, பாட்டு ஓடுது!" 

நீங்களாவது சேர்ந்துக் குலவிடுங்கள்

எங்களுக்கு மட்டுமே கேட்கிறது 
நாங்கள் சொன்ன 
"பொங்கலோ பொங்கல்!" 

- மு.முகமது பாட்சா*
13/01/2016 மீள்

No comments:

Post a Comment

Popular Posts