Thursday, 4 January 2018

முட்காடுகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.
Painting- mohumed

கதைகளைத் தேடுகின்ற பயணம், 
கள்ளியில் 
மாட்டிக் கொண்ட சீலைக்கு 
வழியறியாது, 
பெண்ணென்றால் இப்படித்தான் 
பொத்தாம் பொதுவில் கிழிக்கும் 
முட்காடுகள், 
சிக்கிக் கொண்ட படிமங்களின் 
சிதைவுகளுக்கும் 
படிமங்களைத் தேடும் சொற்புதர்கள், 
பிழைகளுக்குள் பிழையாக 
பேதக் காடுகள், 
நடந்துதான் போகவேண்டும், 
முட்களையகற்ற 
கைகளில் 
கத்திக் கொண்டுவராத நிலையில் ! 

- மு.முகமது பாட்சா*
04/01/2017 

No comments:

Post a Comment

Popular Posts