Thursday, 4 January 2018

படைப்புகளின் திருடி



எண்ணிய நட்சத்திரங்களின் 
எண்ணிக்கையில் 
சில குறைகின்றன!

நிலவு களங்கம் பூசிக் 
கருத்துக் கிடக்கிறது! 

கார் மேகங்கள் 
களவுப் போய் விட்டன! 

கடலில் 
இரண்டு மீன்களைக் காணோமாம், 
மீனவன் வலைகளிலும் 
அவை சிக்கவில்லை? 

பூக்களின் நறுமணம் 
சற்றே குறைகிறது

படைப்புகளின் திருடி 
நீயாகத்தான் இருக்க வேண்டும்

எடுத்திருந்தால் - அவைகளிடமே 
திருப்பிக் கொடுத்து விடு
படைப்புகள் பரிதவிக்கின்றன! 

- மு.முகமது பாட்சா*
04/01/2016

No comments:

Post a Comment

Popular Posts