
தாக்கோலில்லாத அறைக்குள்
நுழைந்து கொள்வது உசிதமானது.
ஒரு புன்னகை மட்டும் போதுமானது,
கதவுகள் தானாகத் திறந்து கொள்ளும்.
கைக் குலுக்கலில் தென்றல் காற்று
தேடி வரும்.
கட்டித் தழுவி கொள்ளுங்கள்
சுவாசங்கள் இடம் மாறிக் கொள்ளும்.
நான் நீயாகவும், நீ நானாகவும்
மாறிக்கொள்வது இங்குச் சுலபம்.
அழகிய வார்த்தைகளுக்கு மட்டுமே
இங்கு அனுமதியுண்டாம்
நுழையும் முன்பாக
வாசலின் அடையாளத்தை ,முதலில்
பார்த்துக் கொள்ளுங்கள்
"நட்பின் அறை' என்று
தெளிவாக எழுதப் பட்டிருக்கும்.
நட்புடன்... முகமது பாட்சா*
மீள் 10/01/2017
No comments:
Post a Comment