Monday, 8 January 2018

இரவின் வேதனை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

இரவு புளித்து 
நுரையாகப் பொங்கிக் கொண்டிருந்தது, 
பகலின் குறட்டை சப்தம் 
நிசப்தத்தைக் கொலை செய்து கொண்டிருக்க, 
உறக்கமில்லாத தலையணை 
உறங்குவதாகப் பாவனைக் காட்டுகிறது, 
பனி காலத்துக் குளிருக்கு 
துயரங்களை உறைய வைக்கத் தெரிவதில்லை, 
நாய்களின் எல்லைப் பிரச்சனை 
இரவினை நீண்ட தூரம் துரத்திக் கொண்டிருக்க.... 
நாடோடிகளின் நிம்மதி உறக்கம் 
இரவிற்கு மிகவும் பிடித்துப் போகிறது, 
காமுகர்களின் கட்டில்கள் 
இரவையே யோனியாக்கிப் புணர்கின்றன, 
ஆலயங்களின் வாசல்கள் பூட்டப் பட்டிருக்கின்றன... 
பிரார்த்தனைகள் 
அந்தரத்தில் தொங்குகின்றது நட்சத்திரங்களாக, 
ஆசைகளின் நீள்பிரதிகள் 
சில கொலைகளையும் களவுகளையும் செய்ய.... 
இரவு  நிம்மதியாக எப்படி உறங்கும்? 

- மு.முகமது பாட்சா* 
08 /01 / 2018  (12 )

No comments:

Post a Comment

Popular Posts