
'நான்' என்ற
ஒற்றை வார்த்தையின்
பகுப்பாய்வுகளில்
பலவாய்ப் பரிணாமித்து
'நானே' நானாகவேயில்லாமல்
தாயாக,
தந்தையாக
உறவுகளின்
தொடர்ப் புள்ளியாய் விரிந்து
காதலியாய்,
இல்லாளாய்,
பிள்ளைகளாய்
முற்றுப் பெறாமல்
பரிமாண வளர்ச்சிகளாய்,
நட்புகளும் உள்ளடக்கி
விரிகிறது பிரபஞ்சமாய்...
நானென்ற நான்
- மு.முகமது பாட்சா
- மீள் கவிதை (03/01/2016)
No comments:
Post a Comment