
பனித் துளிகளோடு கை கோர்த்து
சுவனத்தை நோக்கிச் செல்கிறேன்,
வழியில் காற்றில் கரைந்து விடுகின்றன
பூக்களோடு புன்னகையைச் சுமந்து
மீண்டும் சுவனம் நோக்கிச் செல்கிறேன்,
வாடிய பூக்களை எப்படி எடுத்துச் செல்வது ?
மேகங்களை
துணையாக அழைத்துச் செல்கிறேன்,
மழையாகப் பொழிந்து தனியாக விடுகின்றது.
காற்றுக்கு அனுமதியில்லையென்று
இரண்டாம் வானம் தடுத்துவிடுகின்றது.
ஆசைகளையெல்லாம் சேர்த்தழைத்துப் பார்க்கிறேன்,
அவை பூமியின் சொர்க்கமென்று
நகர மறுக்கின்றன
பொய்களெல்லாம்
நாங்கள் நரகத்தின் நண்பர்களென்று
வர மறுத்துவிட்டதால்....
அழகிய அமல்களை எடுத்துச் செல்கிறேன்,
பூக்களோடு வாசல் புனிதமாகத் திறக்கிறது.
- மு.முகமது பாட்சா*
11/01/2017
No comments:
Post a Comment