Friday, 12 January 2018

எழுத்து வியாபாரி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்


எழுத்து வியாபாரி
--------------------
அரசு விருதுவிற்குத் தேர்வு பெற்றதால் 
அசிங்கமாக என்னை பார்த்தார்கள், 

இல்லாத ஜால்ராவை கைகளில் கொடுத்து 
இதுதான் விருதுவிற்குக் காரணமென்றார்கள், 

தம்பூராவைக் கையிலெடுத்தே 
நான் நடப்பதாகவே நகைத்துச் சென்றார்கள், 

குனிந்து வணங்கி நிமிர்ந்ததால்தான் 
நிமிர்ந்த விருது கிடைத்ததென்றார்கள், 

எழுதிய எழுத்துகளைப் பிரித்து வைத்து 
இதற்கா இவனுக்கு விருது என்றார்கள், 

எதற்கும் நான் சளைத்தவனில்லை, 
எத்துணை முறையும் சொல்லிக் கொள்ளுங்கள், 

நீங்கள் எழுதி கிழித்துப் பெற்றதை விட, 
நான் குனிந்து நிமிர்ந்து பெற்றதே அதிகம் 

மானம் வைத்து வாழ்வதற்கு 
நானொன்றும் மீசை வைத்த பாரதியில்லை, 

விருதுகள் வேண்டுமானால் வெட்கப் படட்டும் 
நான், என் எழுத்தை விற்கும் வியாபாரிதான்  

- மு.முகமது பாட்சா*

13/01/2017 மீள்

No comments:

Post a Comment

Popular Posts