புதிய பானையில் பழைய சோறு,
கொஞ்சமாய் புளிக்காத மோரு,
கடித்துக் கொள்ள பச்சை வெங்காயம்,
அல்லது சுட்டக் கருவாடு,
அப்பச்சியின் பூசி மெழுகிய வீடு,
பாத்து வெளையாடென்று சொல்லும் தாத்தன்,
கொல்லை வீட்டுத் தென்னை மரம் ,
கண்ணெதிரே நகரும் பச்சைப் பாம்பு,
இத்திணையும் விரித்து நகரும் கிராமத்து வாசனை
- முகமது பாட்சா*
No comments:
Post a Comment