
எனக்கும்,
கூடு விட்டுக் கூடு போகத் தெரிகிறது...
கவிதைக் காரனாக!
மரணித்தும் எழுகிறேன்
வார்த்தைகளில் உயிர் நுழைத்து
பட்டாம் பூச்சிகளை
அழகிகளாய் மாற்றுகிறேன்
என் நந்தவனத்திற்குள்
என் அககுரு அசைவுகளில்
வானம் கீழ் இறங்கி வருகிறது
நிலாவை விளக்காக வைக்க முடிகிறது...
நான் உறங்கும் அறைக்குள்ளாக
தோல்விகளை
உதறித்தான் எழுகிறேன்...
உதறும் சில மசித் துளிகளில்!
எழுத்துருகளைக் கொண்டு
சிரிக்கவும்
அழவும் வைக்க முடிகிறது என்னால்!
எனக்குப் பிடிக்கிறது
பறக்கிறேன்....
உங்களின் கைத் தட்டல் காற்றில்!
நட்புடன்...முகமது பாட்சா*
10/01/2016 மீள்
No comments:
Post a Comment