சுதந்திரத்தின்
சுவாசக் காற்றில்
மட்டுமே சிக்கிக் கிடக்க,
நானொன்றும்
அடிமையில்லை
நான் என்னை
உன்னிடம் ஒப்புவிக்கிறேன்
அடிமையாக ஏற்றுக் கொள் ,
உன்னால் மட்டும்தான்
இனிமையான வதைகளால்
இம்சிக்க முடியும்.
ஆம்,
இப்போதும் சொல்கிறேன்,
சுதந்திரத்தின்
சுவாசக் காற்றில்
மட்டுமே சிக்கிக் கிடக்க,
நானொன்றும்
அடிமையில்லை
- மு.முகமது பாட்சா*
மீள் 11/01/2017
No comments:
Post a Comment