Wednesday, 3 January 2018

நடன் அரசியல்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நாடகக்கணிகையின் நயனவிழிகளில் 
நல்லுறக்கம் தேடும் நடன்
காவினில் நுழைந்து களிப்புறுவதும் 
மாத்தானாய் மாண்புறுவதும் 
தேசத்தின் குரலாய்ப் பொழிவதும் 
நிலையறா காமத்தின்பால் அழைப்பதுஉம் 
விரோதிகளை வெட்டி வீழ்த்துவதும் 
வீரனாய் தன்னைக் காட்டலும் 
வெற்று அறம் பேசி வேடிக்கைப் பேசலும் 
சீட்டியடித்து 
சிதறும் கைதட்டல் பெறுதலுக்கேயன்றி 
நாட்டையாண்டு 
நகைப்பூட்டும் மாட்சிமைக்காமோ ? 
தன் தோட்டம் தவிர்த்து பிறர் வாட்டம் அறியார் 
பணமூட்டம் போட்டு வாசம் நுகர்வார் 
நேட்டம் காக்க வேட்டமும் செய்வார் 
இவர்தானா பிறர் வாட்டம் கண்டு வாடிடுவார் ? 
நீட்டமில்லாமல் அறிவை முடக்கி 
நீளுரும் கனவில் நாடகமாடும் நடனின் வயலில் 
கானல் பிழையாய் வளையும் நதியில் 
கண்கள் மட்டுமே நன்றாய் குளிக்கும் காண். 

- மு.முகமது பாட்சா*
03/01/2018 (4)

No comments:

Post a Comment

Popular Posts