
தேநீர்க் கோப்பையில்
எங்கோ விரிசல் இருக்கிறது....
வழிகிறது என் ரகசியங்கள்
.
போதி மரத்தை அரிக்கும்
செல் பூச்சிகளுக்குத் தெரியாது....
புத்தனின் வரலாறு
.
புதையலான - என் புற வெளி...
புழுதியில் புரள்கிறது...
செல் பூச்சிகள் காத்திருக்கின்றன...
அதற்கான உணவினைத் தேடி
.
மக்கி மண்ணாகப் போவது
மரம் மட்டுமல்ல
உயிர் வழியும் கோப்பையும் தான்
.
நிலவின் முகம் காட்டுகிறது
பனித் துளிகள்..
விடியலில் அவை உடைந்து போகும்....
நிலவு மட்டும் வானத்தில்...
என்றுமே நிரந்தரமாக.
- மு.முகமது பாட்சா*
மீள் 11/01/2016
No comments:
Post a Comment