Wednesday, 3 January 2018

நாம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

கனவுதலை 
தலையில் தூக்கி வைத்துவிட்டால் 
சுமந்து கொண்டே திரிகின்றோம், 

பலன்களைப் 
பல்லாக்கில் போகிறவன் 
அறுத்துக் கொண்டு போகிறான், 

நிஜ உலகில் கண் விழித்துப் பார், 
நெருஞ்சி முட்களின் மீதுதான் 
படுத்துறங்குகின்றோம் , 

வாசல்களில் கோலம் போட்டு 
வளைவுகளாய் கட்டி 
கையசைக்கிறாயே , அது யாருக்காக? 

சாக்கடை புழுக்களுக்காக 
சண்டையிட்டுக் கொள்வதும் 
நமக்கு மட்டுமே தெரிந்தக் கலை, 

வேலைக்காரனென்று வந்தவர்கள்தான் 
இடுப்பில் சங்கிலியை கட்டி 
நம்மை வைத்தே 
வேடிக்கைக் காட்டுகிறார்கள், 

பஞ்சணையில் அவர்களை 
படுக்க வைத்து விட்டு 
பாழுந்தரையில் படுப்பதே 
நமக்கும் பழக்கமாகி விட்டது , 

புற்றுக்குப் பாலூற்றிதான் 
பாம்புகளை வளர்த்துவிடுகின்றோம், 
கொத்துமென்று தெரிந்தும் 
கும்பிட்டுத்தான் நிற்கின்றோம், 

கெட்ட ஆவிகளை விரட்ட 
துஷ்ட ஆவிகளை வரவழைத்து 
துஷ்ட ஆவிகளை விரட்ட 
சூது தெரியாமல் விழிக்கின்றோம் 

போராட்டங்களென்பது 
போர்வைகளுக்குள்தான் உறங்குகின்றது, 
எழுப்ப மனமில்லாமல், நாமும் 
சேர்ந்தேதான் தூங்குகின்றோம். 

- மு.முகமதுபாட்சா* 
மீள் - (03/01/2017)

No comments:

Post a Comment

Popular Posts