Friday, 12 January 2018

பட்டாம்பூச்சிகளின் வார்த்தைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.


பறந்து போகின்ற பட்டாம் பூச்சிகள் 
சிதறி விட்டுப் போகிறது 
வார்த்தைகளை... 

சேர்த்தெடுத்து 
கவிதைகள் வடிக்கலாம் 
வா! 

காதல் பறவைகளின் சிறகுகளில் 
உன் வண்ணங்கள் 
ஒட்டிக் கொண்டால்..... 

வான வில்லிற்கு 
யார் நிறம் கூட்டுவது ? 

மின்மினிப் பூச்சிகளே.... 
நீங்கள் பச்சைச் சேலைகளுக்குள் 
பதுங்கிக் கொள்ளாதீர்... 

தவளைக் கூட்டங்கள் 
இருளில் தவிக்கின்றன! 

- மு.முகமதுபாட்சா*

12/01/2016 மீள்

No comments:

Post a Comment

Popular Posts