
இந்தக் கவிதையை எப்படி ஆரம்பிப்பது
யன்னல் வழியே எட்டிப் பார்க்கும் கண்கள்
குருவிகளைத் தேடுகின்றன,
நிலா மட்டும் அதிகம் உட்கார்ந்து கொண்டதால்
அவளென்ன காதலியாயெனக் கவிதை கேட்கிறது,
போதி மரத்து வார்த்தைகள்
புத்தனின் வருகைக்காகவே காத்திருக்கின்றன,
பசப்பு வார்த்தைகளே அதிகம் பூசப்படுவதால்
விலை அதிகமாகிப் போயின,
உண்மை நேர்மை நாணயம் இவற்றைக் கூட
ஆன்மீக வார்த்தைகளென்றே
அகராதியில் திருத்தப் படுகின்றன,
காதலை தேடிப் பிடித்து வார்த்தைகளில் வைக்கிறேன்
கனவுகளுக்குள் போய்ப் பதுங்கிக் கொள்கிறது,
எழுத்துகளைக் குலுக்கிப் போட்டு
வார்த்தைகளை வடிவமைக்கிறேன்
அவையும் களவு போனதாக
என் கவிதை இந்தக் கவிதையை முடித்து வைக்கிறது.
- மு.முகமது பாட்சா*
04/01/2018 (6)
Painting - Artist: Moniruzzamann
No comments:
Post a Comment