
குடும்பத்தை
கூடையில் சுமந்துத் திரிகிறவள்...
பதனிழந்தக் கணவனையும்
பரிசுகளான பிள்ளைகளையும்
.
நளாயினியாக இருக்க வாய்ப்பில்லை?
கதைகளில் மட்டுமே வாழ்கிறவள்,
இவள் கண்முன்னேத் திரிகிறாள்,
.
தொடருந்து வண்டிகளிலும்
ஆலயங்களின் வாசல்களிலும்...
கடவுளை நிந்தித்தவளாக.......
காணும் இவள்
கனிகளை விற்றுக் கொண்டிருப்பாள்
மு.முகமது பாட்சா*
08/01/2016
No comments:
Post a Comment