
நீர்த்த மெய்ம்மை நிழலொழுக்க
பொய்ம்மையின் புறப்பாடு வானளவின் அதிகாரம்,
சாத்தனின் சகடத்தில் வழியும் ஆசை
உதிரத்தின் நீர்மையில் ஊடுருவும் போதை,
மோனச் செருவிளையில்
மோகித்து நிரம்புகிறது காம மஞ்சம்,
கானத்திருமேனியில்
போகிக்கும் முத்தங்களாய் பெரும் மழை,
சாயல் கட்டுடைத்து
நீர்க்கட்டாய் வலிபெருக்கும் பிசி வாழ்க்கை...
நான் நீ பிம்பங்களின்
நீள் பிரமையாய் விரியும் ஆகாயம்,
யார் நிழல்? யார் நிஜம்?
காலத்தின் நூழிலில் விளையும் சூனியம் .
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment