Sunday, 7 January 2018

புத்தகம் - 2



புத்தகம் 2 

கனவுகளைப் புதைத்தவிடத்தில் 
புத்தகங்கள் முளைத்திருந்தன, 
அவற்றைக் கிழித்தொருவன் 
பறவைகள் செய்து கொண்டிருந்தான், 
நான்கு திசைகளிலிருந்தும் 
விதைகளைச் சேகரிக்கின்றன பறவைகள், 
புத்தகங்கள் வனமாக மாறி 
விலங்குகளை அதனுள் உலாவ விடுகிறது 
ஆடுகள் 
நுனிப் புற்களை மேய்ந்து கொண்டிருக்க 
ஆட்டிடையன் 
மேய்ச்சல் நிலத்தையே விற்றுக் கொண்டிருந்தான். 
கள்ளிக் காட்டில் நுழைந்த ஆடுகள் 
ஓநாய்களின் கழுத்துகளில் 
மாலைகளாகத் திரும்பிக் கொண்டிருக்க... 
புத்தகங்களெல்லாம் இப்போது 
புழுக்களாக நெளியத் தொடங்கின, 
விதைகளேயில்லாத மரங்கள் 
பெரும் வனமாகக் காட்சியளிக்கிறது... 
அலமாரியில் 
அந்து பூச்சிகள் வாசித்துக் கொண்டிருக்க 
மேடையில் 
அறிவு சீவிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
08/01/2018 (11)

No comments:

Post a Comment

Popular Posts