
யாரும் எழுதாத கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருந்த கவிதையிடம்
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்,
வார்த்தைகளுக்குள் சிக்காத அக் கவிதை
உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்டது,
பறக்கவோ, நடக்கவோ தெரியாத கவிதைக்கு
விதையென்று பெயரிட்டு
பூமிக்குள் புதைத்து விட்டார்கள்,
புழுக்கங்களுக்குள் புதைந்து கிடந்த (க)விதை
வேர்களை ஊன்றிக் கொண்டு
தலை நிமிர்ந்து வெளியே எட்டிப் பார்த்தது,
ஆடுகளுக்கும் பிடிக்காத அந்தச் செடி
விருட்சமாகி, விதைகளை ஈன்று
காடுகளை உற்பத்தி செய்தது,
காடுகளுக்குள் உயிர்த்த உயிரிகள்
கவிதைகளை நேசிக்கத் தொடங்கின,
விலங்குகளுக்கும் அடைக்கலம் கொடுத்த
கவிதைக் காட்டில்
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தவர்கள்
மூல விருட்சத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள்,
விதைகளான கவிதைகளுக்கு
காடுகளைப் பிரசிவிப்ப்து
அத்துணையொன்றும் கஷ்டமாக இருக்கவில்லை !
- மு.முகமதுபாட்சா*
28/02/2017
No comments:
Post a Comment