Tuesday, 13 February 2018

மூதேவி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்

மூதேவிக்கு 
முகம் முழுக்க மேக்கப் போட்டும் 
சீதேவி மாதிரி ஆகலேன்னு 
வருத்தமாவேயிருக்கு , 
இதழ்கடையில் வழிஞ்ச 
இரத்தத்தையெடுத்து 
உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்கிறாள், 
சூலமும் , அருவாளையும் 
ஆயுதமாகத் தாங்கிக் கொண்டு, 
கைகளை மேலுயர்த்தி 
கடாட்சம் காட்டுகிறாள், 
இவள்தான் நெசமான சீதேவின்னு 
மூதேவி பிள்ளைகள் முழக்கம் செய்ய 
மூதேவிக்கும் 
சீதேவி கலை வந்துட்டதாகவே நெனப்பு . 
பாடைகட்டி 
ஊர்வலம் போகும் அந்த பன்னாடைக்கு, 
சுத்தியடிக்கும் ஊத்த நாத்தம் 
சுத்தாமத் தெரியலை....
என்ன சொல்ல 
தேவலோகம் கொழம்பித்தான் போனதா
நெனைச்சிகிட்டு
மூதேவி, ஊர் முழுக்க 
மொழக்கம் செஞ்சிகிட்டே திரியுது 
தான்தான் சீதேவின்னு. 

- மு.முகமதுபாட்சா*

13/02/2017

No comments:

Post a Comment

Popular Posts