Saturday, 24 February 2018

ஶ்ரீதேவி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குளோஸ் அப்

திரையுலகின் அசாத்தியத் திறமை மறைந்துவிட்டது.

குழந்தை நட்சத்திரமாகப் பயணத்தை தொடங்கியிருந்தாலும் , கதாநாயகியாக 
அறியப்பட்டது கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு" திரைப்படம்தான். தன்னைப் 
பின் தொடரும் வில்லனுக்கே (ரஜினி காந்த்) அம்மாவாக மாறும்  கனமான பாத்திரம். 
அசால்டாக செய்திருப்பார்.

16  வயதினிலே சப்பாணியின் நடிப்பைப் பின்னுக்கு தள்ளிவிட்டு 
முன்னால் வந்து நின்றவர் மயிலு ஶ்ரீதேவி!

மீண்டும் கோகிலாவாகட்டும் சிகப்பு ரோஜாவாகட்டும் கமல் அவரோடு 
போட்டி போட்டே நடிக்க வேண்டியிருந்தது.

மூன்றாம் பிறையில் கமலின் நடிப்பை இரண்டாம் இடத்திற்கு நகர்த்திவிட்டு 
முதலிடத்தில் உட்கார்ந்து கொண்டவர்.

ஜானியில் அவரது நடிப்பு  தனி முத்திரை !

அவர் இந்தியில் கொடி கட்டிப் பறக்க தொடங்கிய பிறகு அவரது ரசிகர் பட்டாளம் 
விரிந்து நின்றது. போனி கபூரை அவர் திருமணம் செய்து கொண்ட பிறகு 
அவரது ரசிகர்கள் போனிகபூரை வில்லனாகப் பார்த்தார்கள் என்பதுதான் உண்மை.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' 
ஆகட்டும் 'மா' ஆகட்டும் அவர் இன்னமும் தன் திறமையை இழக்கவில்லை 
என்பதைப் பறை சாற்றியது.

அவரது தமிழின் கடைசி படம் 'புலி ' விஜய் உடன் அமைந்தது. 
இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் அவர் அதே போட்டி போடும் நடிகையாகவே 
இருந்தார் என்பதைத் தெளிவாக்கியது!

இந்திய சினிமாவில் இதுவரை இன்னொரு ஶ்ரீதேவி பிறக்கவில்லை என்பதுதான் 
நிதர்சனமான உண்மை!

- முகமது பாட்சா*
25/02/2018

No comments:

Post a Comment

Popular Posts