
உமிழும் முன்பாக
சரியாக முடிவு செய்யுங்கள்
உமிழப்படும் நபர் இவர்தானா?
உருவங்களைப் பார்த்து
முடிவு செய்ய முடியாது...
கண்கள்
சில நேரம் ஏமாற்றி விடுகின்றன!
நம் நிழலே கூட
ஓர் உருவமாய்
நம் எதிரில் நிற்கக் கூடும்...
நாம் நேசித்த நபராகவும்
இருக்கலாம்,
துரோகத்தின் நிழல் நின்றால்
உடனே
தாமதிக்காமல் துப்பி விடுங்கள் ,
இல்லையென்றால்
சட்டென்று நிறம் மாற்றி
நட்பு போர்வை போர்த்தி
தப்பித்துக் கொள்ளும்,
பிறகென்ன
கூடா சகவாச கூட்டுச் சதியால்
நிழல்கள் கூட ஒன்று கூடி
நம் மீதே காறி உமிழக்கூடும் !
- மு.முகமதுபாட்சா*
15/02/2017
No comments:
Post a Comment