Tuesday, 13 February 2018

சங்க காதல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது 
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு 
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது 
பசலை உணீஇயர் வேண்டும் 
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”

              கொல்லன் அழிசி
              (சங்க கால பாடல்)


மடி நிறைந்த ஆவின் பால்
இளம் கன்றிற்கும் உதவாமல்
கறவைக்கலத்திலும் வீழாமல்
நிலத்தில் விழுந்து
வீணே போதல் போல்
எனக்குமே ஆகாமல்
என் அவனுக்குமே சேராமல்
காமத்தின் நோயா உண்ண வேண்டும்
படர் அல்குலின் மாமை அழகை!

* மு.முகமது பாட்சா*
14/02/2018

No comments:

Post a Comment

Popular Posts