Saturday, 17 February 2018

மேயும் ஆட்டுக் குட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

கூடாரத்திற்குள் நுழைந்த 
ஒட்டகத்தின் தலையை வெட்டிவிட்டு 
ஒட்டகத்தை மீட்டு விட்டதாகச் சொல்கிறான், 
நிழல்கள்தான் தன்னை மிதித்திருப்பதாக 
குற்றம்சாட்டிய அதேவேளையில் 
வாளின் கூரால் சிதைத்துவிட்டுச் சிரிக்கிறது 
அசுர நிழலொன்று... 
விறைத்துக் கிடக்கும் மருள் விழிகளினுள்ளே 
உருண்டு வரும் இறந்தகாலம் 
நிகழ்காலத்தின் கூற்றுகளைச் சபிக்க, 
ஆன்மாவை அடக்கிக்கொண்ட அவ்வுடல் 
உரமாகி விருட்சமொன்றை விளைவிக்கிறது, 
அதில் பூத்த தளிர் தழைகளை மேயும் 
ஆட்டுக்குட்டியும் 
தலையிழந்த ஒட்டகத்தை நினைவில் மீட்டி 
நிழலை மிதித்து நடக்க, 
யாரோ ஒருவன் கூவிக்கொண்டே செல்கிறான், 
உண்மைகள் விற்பனைக்கென்று... 
அவன் பின்னால்தான் செல்கிறது உண்மையும் 
பொய்களைக் கூடையில் சுமந்து கொண்டு

- மு.முகமதுபாட்சா
17/02/2017

No comments:

Post a Comment

Popular Posts