
வார்த்தைகளைத் தேடுவதில்
ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது,
விரல்களின் அழுத்தத்தில்
எழுத்துகள் ஒளிரும்போது
நான் மீண்டும் பிறக்கிறேன்.
கலைத்துப் போட்டு
வார்த்தைகளை அடுக்கும் போது
சில எழுத்துகள் மிச்சமாகி விடுகின்றன.
மிச்சமான எழுத்துகள்தான்
முடிக்காத வார்த்தைகளை முழுமையாக்குகின்றன
வாசிப்பில் அடங்கியிருக்கும் ஓசைகளில்தான்
வார்த்தைகளின் உயிர் ஒளிந்திருக்கிறது,
வார்த்தைகளோடு நான்
இப்போது வசிக்கத் தொடங்கிவிட்டேன்,
காற்றடித்தாலும்
சில வார்த்தைகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன,
தூங்கும் போது
கண்ணிமையில் உட்கார்ந்திருக்கும் வார்த்தைகள்
கனவுகளாய் கவிதைகளை பொழிகிறது
நான் தனியாக பேசிக் கொண்டிருந்தால்
இவன் பைத்தியமென்று நினைக்காதீர்கள்...
வார்த்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
18/02/2018
No comments:
Post a Comment