Friday, 9 February 2018

இரவின் மழை உப்புக் கரிக்கிறது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை, வெளிப்புறம் மற்றும் இயற்கை

விதவையின் 
நீட்சிமைப் பார்வையின் நிழலாய்
இரவின் நிசப்தம் நீள்கிறது...

நீர் வற்றிய தடாகத்தில் 
காத்திருக்கும் கொக்கின் வெறுமை 
வெள்ளை,

இலையுதிர்த்த மரங்களின் 
கீழ் நகரும் சிறு பூச்சிகள் சலனத்தின் பிரதிகள்...

மயானத்தின் அமைதியும் மௌனத்தின் அமைதியும்
சற்றேறக்குறைய ஒன்றுதான்...

விழிகளின் சுவாசத்தை
இரவுகள் மட்டுமே எப்போதும் நுகர்கின்றன...

வருவதும் போவதும் வாடிக்கையென்ற
பட்டினத்தாரின் பாடல்
நுனிக் கரும்பில் உட்கார்ந்திருக்கிறது

மலைகளின் ஏக்க பெருமூச்சினை
மேகங்களின் மெல்லிய அதிர்வில் உணரலாம்...

இரவின் மழை
ஏன் உப்புக் கரிக்கிறது?

மு.முகமது பாட்சா*
10/02/2018





No comments:

Post a Comment

Popular Posts