Monday, 12 February 2018

காற்றிலாடும் வார்த்தை

தானியங்கு மாற்று உரை இல்லை.


என் வார்த்தைகளை 
மொழி பெயர்க்கும் போது 
சில வார்த்தைகளை 
உதிர்த்துவிடுகிறாய் ...
சருகாகிப் போன அவ் வார்த்தைகள் 
உன் கால்களில் 
ஒட்டிக் கொண்டே தொடர்கிறது, 
எழுதாத வார்த்தைகளை 
நீ எப்படிக் கோர்த்தாய்? 
பிழையான எழுத்துகளில் 
சில வார்த்தைகள் 
சிக்கிக் கொண்டிருக்கின்றன. 
நானென்பது நீயாகவும் 
நீயென்பது நானாகவும் 
திரிந்து கிடக்கிறது...
வார்த்தைகளின் நடுவே 
விட்டு வைத்திருந்த இடைவெளி 
உனது ஆழ்ந்த மௌனமா? 
அல்லது என் நீண்ட பெரு மூச்சா? 
காற்றிலாடும் அந்த வார்த்தைகளை
பத்திரமாகப் பிடித்து வை... 
அது நம் காதலை 
சொல்ல வந்ததாகவும் இருக்கலாம்.  

- மு.முகமது பாட்சா*
12/02/2018

No comments:

Post a Comment

Popular Posts