
நான் தேடிக் கொண்டேயிருக்கிறேன்
இதுவரை அது கிடைக்கவில்லை
எதைத் தேடுகிறேன் என்பதைத்தான்
இன்னமும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்,
என்னையும் சிலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
எதற்காகத் தேடுகிறோம் என்பதை
அப்போதுதான் அவர்கள் சொல்வார்களாம்
நீங்கள் எதையாவது தேடிக் கொண்டிருந்தால்
அதுவும் நான் தேடுவதாகத்தான் இருக்கும்
சற்று ஒதுங்கி நில்லுங்கள்
எதையோ தேடிக் கொண்டிருந்தவர்
பூப்பல்லக்கில் சிந்தித்து கொண்டே போகிறார்
அவர் போன பிறகு
மீண்டும் நாம் தேட ஆரம்பிப்போம்.
- மு.முகமது பாட்சா*
28 /02 /2018
No comments:
Post a Comment