திடமிழந்து அலைந்தாடும்
மனதின் அலைகளின் ஓரத்தில்
அசைந்தாடும்
அந்த ஒற்றைப் படகினில்தான்
அலை மோதும் காற்றின் இடையேயும்
ஒரு சிறு வெளிச்சமாய்
என் வாழ்க்கை
அணைவதும் அணையாததுமாய்
காற்றின் நிலைப் பாட்டில்!
...................................................................
போதி மரத்தின் கீழ்தான்
சிற்றெறும்புகளின் ஊர்வலம்
சித்தார்த்தன் இடம் மாறினான்!
----------------------------------------------------------
எழுத்துகளுக்கும் வாசனையிருப்பது
தெரியுமா உங்களுக்கு ?
அவள் அப்படிதான் சொல்கிறாள்!
...........................................................................
வார்த்தைகளை மறைத்து வைத்துக் கொண்டு
கவிதையில் பிழை காண்கிறாள்,
கண்களில் தேடிக் கொண்டிருக்கிறேன்
முழுமையான கவிதை வடிக்க !
------------------------------------------------------------------
தடுக்கி விழுந்த
வார்த்தைகளில்தான்
அவளின் சிரிப்பு
ஒளிந்திருந்தது !
----------------------------------------------------------------------
- மு. முகமதுபாட்சா*
19/02/2016
No comments:
Post a Comment