மனப் பிரளயத்தின்
நடுவே
இருப்பதாய்த் தோன்றுவதும்
இல்லாதா ஒன்றாகி
இல்லாத ஒன்றும்
இருப்பதாய் நிலை மாறும்
அந்த ஒன்றைத்தான்
ஒருவன் கடவுள் என்கிறான்!
மற்றவன் காதல் என்கிறான்!
000

ரோஜாவாகவோ
சிகப்பு நிறச் சாட்டினில்
பொதியப்பட்ட இதயமாகவோ
இருக்க வாய்ப்பேயில்லை!
மஜ்னூவின்
ஒருமித்த சிந்தனையின்
அலைச்சல்களாகவும்
ஷாஜஹானின் நரைத்தத்
தலைமுடியாகவும் இருக்கலாம்!
தனிமையின் மயக்கத்தில்
புன்னகை வரையும்
தூரிகையாகவும்
ஏன் இருக்கக் கூடாது?
.
.....மு.முகமதுபாட்சா*
13/02/2016
No comments:
Post a Comment