Monday, 5 February 2018

அழுகை சப்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

விழுந்துகிடந்த காலி பாத்திரத்தை 
சிலர் 
காலால் எட்டியுதைத்துச் சென்றார்கள், 
காற்றின் அடர்த்தியின்மை 
காயங்களை அதிகம் செய்திருந்தது, 
உருளும்போது அதிர்ந்திடும் சப்தம் 
உயிர்விடும் இருமலாய் ஒலித்தது, 
சிறு நீரின் முடை நாற்றம் 
சிறுவன் சேர்த்துவிட்டுப் போனான், 
காறியுமிழ்ந்த கட்டியெச்சில் 
ஒட்டிக் கொண்டது உயிர்விடும் சுவாசமாய், 
நிறையில்லா பாத்திரம் 
என்றும் நிஜமில்லையென்பது சாத்திரம், 
ஓடுகிற வண்டி மிதித்து 
ஓடாத பாத்திரம் மண்ணிலழுந்தியது.... 
சாவு வீட்டில்தான் அதிசயமாகக் கேட்கிறது 
பாலுக்கழுகின்ற 
கைக் குழந்தைகளின் அழுகை சப்தம்.

- மு.முகமது பாட்சா*
05 /02 /2018

No comments:

Post a Comment

Popular Posts