Thursday, 22 February 2018

விழிக்கும் வெளிச்சம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இரவு 
வெப்பத்தால் வியர்த்து வழிகிறது
காட்டுக்குருவிகளின் சப்தம் 
மெல்ல விரியும் போது
பகல் கண்விழிக்கும்
அதுவரையில் மூச்சுகளின் வெப்பக்காற்று
மேகங்களையுரசி 
மின்னல்களை உற்பத்தி செய்யும்
கண்களுக்குள் சங்கமிக்கும் 
மா கடல் ஆர்ப்பரிக்கும் நெஞ்சிற்குள்
பட்டாம் பூச்சிகளின் வண்ணம் 
பவ்வியமாய் ஒட்டிக் கொள்ள
நிஜமில்லாதவொன்று தன்
யன்னலைத் திறந்து காற்றை வரவழைக்கும்
மின்மினிப் பூச்சிகள் விளக்குகளாய் மாற
அர்த்த சாமத்தின் அந்தரத்துப் பூசை
கற்பூர மணம் வீசும்...
கைகள் இரவினை இறுக்கிப் பிடிக்க
மெல்லப் பிதுங்கி விழிக்கும் வெளிச்சம்.

- மு.முகமது பாட்சா*
23 /02 /2018


No comments:

Post a Comment

Popular Posts