
அரசியல் செய்யாதே
என்று சொல்லிவிட்டு
அழகாய் இருக்கிறாய் என்று
அரசியல் செய்கிறாய் ,
பூக்களை பிடிக்குமென்று
சொல்லிவிட்டு
என்னைத்தான்
முகர்ந்து பார்க்கிறாய் ,
புற்களுக்கு வலிக்குமென்று
பாதங்களுக்கு முத்தமிடுகிறாய்,
பார்வைகளால்
என்னைத் திருடி போவதற்கு
கண்களுக்கு
கற்றுக் கொடுத்திருக்கிறாய்,
தேனைப் பற்றி
நீ பாடம் எடுப்பது
எதற்கென்று எனக்குப் புரிகிறது...
சொல்லவந்ததை
உடனே சொல்லிவிடு,
நானும் உன்போல்தான்
உன்னையே
ரசித்துக் கொண்டிருக்கிறேன் !
மு. முகமதுபாட்சா*
16/02/2017
No comments:
Post a Comment