Saturday, 17 February 2018

ஏழைகள் சாவ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை


ஏர்க் கலப்பையைப் பிடுங்கிவிட்டு 
டிராக்டரில் வந்தார்கள் 
உழவு மாடுகளை 
அடிமாட்டுச் சந்தைகளுக்கு 
நகர்த்திப் போனோம்... 
கறவை மாடுகளின் வாயிலடிக்க 
வைக்கோலை 
பதராக்கியது ஒர் எந்திரம், 
நாற்று நட, களையெடுக்க 
நெல்லடிக்க, பதர்நீக்க 
மூட்டைப் பிடித்து தைத்து வைக்க 
அத்தனைக்கும் எந்திரங்கள்! 
ஏழைகளின் பசிப் போக்க 
ஏன் ஒன்றுமில்லை! 
நகரத்தில் வேலைக் கேட்டால் 
வேலையும் எமக்கில்லை! 
கிராமத்திற்கே மீண்டும் போனால் 
கிராமமே காணவில்லை! 
நல்லாகத்தான் முன்னேறுகிறோம் 
நாக்குத் தள்ளி ஏழைகள் சாவ! 

- மு.முகமதுபாட்சா* 
16/02/2016

No comments:

Post a Comment

Popular Posts