
வார்த்தைகள் உடைந்து
தொங்கிக் கொண்டிருக்க
பலகீனமான காற்று
சன்னல்களை
ஓங்கியறைந்து சாத்துகிறது
கடிகாரத்தின் முட்கள்
பயத்தில் நடு நடுங்குகின்றன
கறுப்பு பூனையின் கண்களாய்
வாழ்க்கை பயமுறுத்துகிறது
தனிமையில்
உட்கார்ந்திருக்கும் வெறுமை
மெல்லத் தீப்பற்றியெரிய
தேகத்தில் மர்மம்
கைகளைப் பரப்பி படர்கிறது...
ஒற்றைப் பூவாய் உதிரும் சலனம்
விளக்கிற்குள் அலையாட
வெளிச்சம் தேடி
நானும் என் மனசும் புறப்படுகிறோம்
காகமொன்று எங்களையே
தலை சாய்த்து
பார்த்துக் கொண்டிருக்கிறது....
- மு.முகமது பாட்சா*
28/02/2018
No comments:
Post a Comment