Saturday, 24 February 2018

குறுகிய மனிதன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

குறுகிப் போன மனிதனின் மூளையில் 
காற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள், 
போதை அவனை 
தன் மந்திரக் கோலில் கட்டி வைத்திருக்கிறது, 
யோசனை தூரங்களில் நடந்து கொண்டேயிருக்கிறான், 
மாயவலைகளில் அவனே சிக்கிக் கொண்டு 
மகிழம்பூ வனத்தில் படுத்திருப்பதாகச் சொல்கிறான், 
கதைகளுக்குள் அவனைக் கடத்திப் போவதும், 
கவிதைகளுக்குள் அவனை உறங்க வைப்பதும், 
அவர்களுக்குச் சுலபமாக இருக்கிறது... 
அவர்களின் கைகளில் தொலை இயக்கியொன்று 
எப்போதும் இயக்கத்தில் இருக்கிறதாம், 
அவர்கள் இயக்கும் போதெல்லாம் 
அவன் உறங்கி விடுகிறான், 
அவனையே அவர்கள் திருடிச் சென்றுவிடுகிறார்கள், 
ஆனால், அவனுக்கு இன்னமும் தெரியவில்லை, 
தான் காணவில்லையென்று... 
அவனிடம் சொன்னபோது 
அவனால் சிரிக்க மட்டுமே முடிகிறது,
அவன் இயக்கத்திற்கு 
அவ்வளவு மட்டும்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் !

- மு.முகமது பாட்சா*

24/02/2017

No comments:

Post a Comment

Popular Posts