Tuesday, 13 February 2018

காயிஸின் காதல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அத்தனை பூக்களும் 
அழகுதான் 
லைலா மட்டும் அதில் தனியழகு! 
காயிஸின் 
இதயத்தைப் பறித்துக் கொண்டு 
அவன் கவிதைகளை 
காதலின் பக்கம் மடை மாற்றி 
முகம் மறைத்த முந்தானைக்குள் 
கண்களால் 
காதல் பேசியவள்! 
இதயத்தின் இசையாகத்தான் 
காதல் இருக்க வேண்டும்... 
காயிஸின் சோக இராகத்தை 
கண்களின் வழியாய் 
லைலா எளிதில் கடத்துகிறாள்! 
மஜ்னூன் என்ற பழிச் சொல்லை 
மரணத்தால் 
உடனே கழுவுகிறாள்! 
பைத்தியங்கள் மட்டுமே அவனை 
மஜ்னூன் என்கிறார்கள்... 
காயிஸ் மட்டும் லைலாவிற்கு 
காதலாகவே வாழ்கிறான்! 

 

மு.முகமதுபாட்சா*



14/02/2016 

No comments:

Post a Comment

Popular Posts