
கணவன் :
சொல்லாத சொல்லுக்கெல்லாம்
சொக்கட்டான் ஆடுறயே...
சோத்துப் பானக் கவுந்துப் போனா
வவுத்துப் பானக் காயுமடி!
மனைவி :
கருத்தாதான் பேசற மச்சான்
கணக்காதான் குடிச்சிப் போட்டு
கல்யாண வயசுலதான் , பொண்ணு
காத்துக் கெடப்பது தெரியாம?
கணவன் :
கால் போத்தச் சாராயம்
கஷ்டத்தில நான் குடிச்சேன்
துஷ்ட சக்திச் சூழ்ந்திருக்கு ,நாம
துக்கத்தைத் தான் தூக்கிச் சுமக்க!
மனைவி :
குடிச்சழிச்சக் காச யெல்லாம்
சேத்துவச்சிப் பாத்திருந்தா
சொக்கத் தங்கம் சேர்ந்திருக்கும்
சோத்து ருசிக் கூடி யிருக்கும்!
கணவன் :
வாத்தியாரு மவளாத் தான்
வக்கனையாப் பேசற நீ!
கவர்ன்மெண்ட்டுக் கடையால, நான்
கண்ணழிஞ்சிப் போனேன்டி!
மகள் :
காசு வாங்கி ஓட்டுப் போட்டா
தறுதலைத் தானே ஆட்சிச் செய்யும்.. நீங்க
சண்டப் போட்டு என்ன செய்ய, இனி
சூதானமா இருக்க வோணும்!
- மு.முகமதுபாட்சா*
10/02/2016
No comments:
Post a Comment