
உன் நிழலை எடுத்து
உடுத்திக்கொள்கிறேன்
நீ என்னை
திரும்பிப் பார்க்காமல்
சென்று கொண்டிருக்கிறாய்,
நானென்பது
எங்கோ கழன்று
வீழ்ந்து கிடக்கிறது....
அதைக் காண்பவர்கள்
கடலில்
வீசியெறிந்து விடுங்கள்
அஃதென்னை
தொற்றிக்கொள்வதில்
விருப்பமில்லை,
உன் பாதம் பட்ட புற்களில்
பாரிஜாதம் பூப்பதாக
கற்பனை செய்கிறேன்...
கண்களை உன்னோடுவே
எடுத்துச் செல்கிறாய்
காட்சிகளை
நான் என்ன செய்ய?
நிர்வாணத்துடன்
நடப்பதாகச் சொல்கிறார்கள்
உன் நிழல் அவர்களின்
கண்களுக்குத் தெரியவில்லை...
என் ஆடைகளை
அவர்கள்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்,
திரும்பிப் பார்த்துவிடாதே
நீயும்
என் ஆடைகளைத் தேடினால்
நான் நிச்சயம்
நிர்வாணமாகிவிடுவேன்.
- மு.முகமது பாட்சா*
25/02/2018
No comments:
Post a Comment