தன்னிருப்பை காட்டுதற்காவது
மன நலம் உள்ளவர்கள்
ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும்
கைகளில் மிளகாய் தூளெடுத்து
போவோர் கண்களில் தூவி விடலாம்,
செல்போன் டவரில் நின்று கொண்டு
சாவதாகப் பாவனை செய்யலாம்,
மூத்திரம் குடித்தால் முகத்திற்கழகென்று
வைத்திய குறிப்பு சொல்லலாம்,
ஆசீட் வீசிய நல்லவனுக்கு
பாராட்டுக் கடிதம் எழுதித் தரலாம்,
இயற்கை சீற்றம் இடறும் நேரத்தில்
பிணங்களின் நகைகளைத் திருடலாம்,
காயம் பட்டவனைக் காப்பாற்றாமல்
செல்பி எடுத்துப் பகிரலாம்...
மனநலம் இல்லாதவன் ஏதுமெடுத்தால்
அடித்தே கொல்லலாம்....
இப்படி
தன்னிருப்பை காட்டுதற்காவது...
-மு. முகமது பாட்சா*
24 /02 /2018
No comments:
Post a Comment