
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குதென்ற
மாயாண்டியின் குடுகுடுப்பை,
அடுத்த அதிர்வில்
'இந்த வீட்டு அய்யாவுக்குத் தோசமிருக்கு,
செய்வினை காத்தொன்னு சுத்தியிருக்கு'ன்னு
தூக்கி வைத்தான் அதிரடியை,
கண்ணேறு கூடியிருக்கு,
பிரயாணங்கள் ஆகாதென்றான்,
பத்து ரூபாய் தாளொன்று
பறந்தமர்ந்த அடுத்த அதிர்வில்
சங்கை முழங்கிய குடுகுடுப்பை,
சலசலவென்று கொட்டியது,
அய்யா தோசம் பொடியா போகும்...
தொட்டக் காரியம் பட்டென விளங்கும்...
மகாசக்தி துணையாயிருப்பா ...
மகாசக்தி துணையாயிருப்பா...!
- மு.முகமதுபாட்சா*
21/02/2017
No comments:
Post a Comment