
படிச்சப் பொண்ணு
வேண்டாம்ன்னுச் சொல்லிட்டேன்!
ஏன்டா மச்சான்?
அம்மாவுக்கு
புடிச்சப் பொண்ணா இருக்க மாட்டாடா!
ஆனா அழகா இருக்கணும்னு
அடிச்சி சொல்லிட்டேன்!
இது கொஞ்சம் ஓவர்தான் மச்சான்!
சித்ரா கதி அப்ப என்னடா?
அவ எல்லார்கிட்டேயும் சிரிக்கிறா மச்சான்
சீக்கிரம் கழட்டி விடணும்!
அந்த ஃபிகர் எப்படிடா மச்சான்?
சப்பை ஃபிகர்!
உனக்கு டேஸ்ட்டே இல்லடா!
அப்படி இப்படி இருக்கப் போகுதுடா?
ஒழுக்கமான பொண்ணுன்னு
அம்மா சொல்றாங்க மச்சான்!
செட்டாயிடும்னு அடிச்சிச் சொல்லு!
தம்மை எடு மச்சான் வாய் நம நமக்குது!
பார்ட்டிக் கொடு மச்சான் கொண்டாடிடுவோம்!
வேலைக்குப் போற ஐடியாவே இல்லையாடா?
மாமனாருக்கு
சொந்தமாக் கடையிருக்காம் மச்சான்!
அப்படிப் போடு அதிர்ஷ்டக் காரண்டா நீ!
அளவாச் சாப்பிடு மச்சான்
பொண்ணு வூட்டுக் காரங்க
கண்டுக்கப் போறாங்க!
மு.முகமதுபாட்சா*
05/02/2016
No comments:
Post a Comment