
அரசாங்கத்தின் கஜானக்களை
காலிச் செய்யாதீர்கள்...
மக்களுக்காக சிந்திக்க
குளுகுளு மலையில்
ஐம்பது ஏக்கரில்
சின்னதாகவொரு
குடிசைக் கட்ட வேண்டும்,
ஓய்வூதியங்களை
ரத்துச் செய்து விடுங்கள்...
சேமிக்கும் பழக்கத்தை
நாம்தானே கற்றுத் தர வேண்டும்,
நூலகங்கள் எதற்காக?
அறிவு வந்தால் கேள்விகள் வரும்
வினைதான் நமக்கு,
யாகங்கள் நடக்கட்டும்
திசைத் திருப்ப
நிச்சயமாகப் பயன்படும்,
இலவசங்கள் கொடுப்பதை
நிறுத்த வேண்டாம்.
கமிசன் வரவு
தடைப் பட்டுப் போகலாம்,
மாசு வந்தால் விட்டு விடு
அதைத் தடுக்கும் மானியம்
நமக்குதான் வரும்!
கட்சியென்பது சும்மாயில்லை
நடத்திப் பார்த்தால்தான் தெரியும்
கஷ்டம் என்னவென்று.
- மு.முகமதுபாட்சா*
15/02/2016
No comments:
Post a Comment