ஆதாமின் தோட்டம் (ரமலான்1)

வார்த்தைக் கூட்டங்களால்
தோட்டத்தை நிறைக்கிறாள் ஏவாள்...
காயாக இருந்த மரம்
பழங்களாகத் தொங்க விடுகின்றன...
ஆதாமின் தொண்டைக்குள்
வார்த்தைகள்
சிக்கித் திணறுகின்றது...
கரும் நாகமொன்று
கண் படாமல் நகர்ந்து செல்ல...
முதன் முறையாக
இதழ்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்...
எச்சில் பட்ட கனி
சதைகளை இழந்து நாற்றமெடுக்கத்
தசைகளில்
கனிகள் காய்த்துத் தொங்குகின்றன...
வெட்கம் வேர்விடும் வேளையில்
இலைகள்தான்
முதல் ஆடைகளை நெய்கின்றது...
சபிக்கப்பட்டவன் சத்தமாகச் சிரிக்கிறான்
ஆதிபாவங்கள்
அழுதுகொண்டே வெளியேறுகின்றன...
- மு.முகமது பாட்சா*
06/05/2019
painting: Mahmoud Saïd, Adam & Eve
No comments:
Post a Comment